Saturday, February 19, 2011

கண்ணகி தாயே சரணம்


கண்ணகி தாயே சரணம்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்
வாயுறை வாழ்த்தின் வாக்கு என்றேனும் தோற்று இருக்கிறதா ? இல்லையே .. இந்த குறள் கண்ணகிக்கும் பொருந்தும். ஆம் சாதாரண பெண் வணிக குலத்தில் பிறந்த பெண் கோவலனை மணக்கிறாள்.. அவனோ இந்திர விழாவில் கண்ட மாதவியின் பால் மனம் செல்ல கண்ணகியோ அவனுக்காக காத்து இருக்கிறாள். மேலும் ஒரு குறிப்பு படித்த ஞாபகம் “கண்ணகி கோவலனை தன் கண்ணுக்கு உள்ளயே வைத்து இருப்பதால் மை இட மாட்டாளாம் எங்கே கண்ணீர் வந்து அவன் கண்ணை  விட்டு விலகி விடுவான் என்று “ ஆக கல்லாலும் கணவன் என்கிற மரபில் வாழ்ந்த கண்ணகி பின் மதுரையில் குற்றம் சாற்ற பட்டு கழு ஏற்றப்பட்டதும், பின் அவள் உண்மையை கொண்டு வந்து மதுரையை எரித்த கதை அனைவருக்கும் தெரியும் .

பின் மதுரையை எரித்து அங்கு இருக்க விரும்பாத அவள் நேராக சேர நாட்டுக்கு செல்கிறாள். அங்கே செல்லும் அன்னை பாலகி வடிவில் கிள்ளியாற்றில் கடக்க முதியவரின் துணையை நாடுகிறாள் . அவரோ அந்த பாலகியை(அன்னையை) கடந்து விட உதவுகிறார். அக்கரையில் இறங்கி, தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று, அவளுக்கு உணவு பரிமாறினார். சாப்பிட்டு முடித்துப் பார்த்தால், சிறுமியைக் காணோம்!.பின் அன்னையின் உருவம் அவர் மனதிலே இருக்க அவர் கனவில் அன்னை வந்து தென்னந்தோப்பில் மூன்று கோடுகள் இருக்கும் இடத்தில் கோவில் கட்ட பணிக்க கோவில் எழுப்பபடுகிறது.


அன்னை அங்கு இருந்து சென்று கொடுங்கல்லூரில் விண்ணுலகம் செல்லுகிறாள்.



ஆக அன்னையின் கோவிலில் நடக்கும் ஆண்டு உற்சவம் விசேஷம் ஆனது . பத்து நாள் விசேஷத்தில் கனகியின் கதையை சொல்லுகிறார்கள். ஒன்பதாம்  நாள் தான் பொங்கல் விழா . மேல் சாந்தி முதல் அடுப்பை பற்ற வைக்க அப்படியே அனைத்து அடுப்புகளிலும் தீ பரவும்.





அன்னையின் நாமம் பகவதி.
97-ஆம் வருடம் நடைபெற்ற விழாவில் சுமார் 15 லட்சம் பேரும், 2009-ஆம் வருடத்தில், சுமார் 25 லட்சம் பேரும் பொங்கல் படையலிட்டுள்ளனர் என்பது, கின்னஸ் புத்தகத்தில் பதிவாகியுள்ளது! அனைவரும் பெண்கள்; இந்த நாளில் ஆற்றுகாலில் எங்கு பார்த்தாலும் பெண்கள், பெண்கள், பெண்கள்! இதனால், பெண்களின் சபரிமலை எனப் போற்றப்படுகிறது, ஆற்றுகால் ஸ்ரீபகவதியம்மன் ஆலயம்!






குத்தியோட்டமும் தாலப்பொலியும் மிக பிரசித்தம். தாலப்பொலி என்பது ஒரு தட்டில் விளக்கு தென்னம்பூவின் ஒரு பகுதி வைத்து கிரீடம் சூடி செல்வார்கள்(கேரள குறிப்பாய் நாயர் திருமண வீடுகளில் இந்த சடங்கு உண்டு ஆனால் கிரீடம் இல்லை ). குத்தியோட்டம் என்பது உடலில் சிறு கொக்கிகள் மாட்டி கொண்டு ஓடுவது.
பகவதி அன்னை எப்போதும் காப்பாள் என்ற நம்பிக்கை நம்ம ஊரு மக்கள் மட்டும் இல்லாமல் வெளி நாட்டவரும் வந்து பொங்காலையில் வந்து கலந்து கொள்கிறார்கள் ..
சரி பொங்கல் பானைகளை அம்மன் ஏற்று கொண்டாள் என்று எப்படி நம்புவது. எட்டு கிலோமீட்டருக்கு நடக்க முடியுமா ? அதனால் தான் வான் வழியே ஹெலிகாப்ட்டர் மூலம் பூ சொரியப்படுகிறது.... 



இருப்பிடம் :  வளமான குமரி மாவட்டத்தின் தலைநகராம்  நாகர்கோவிலில் இருந்து சுமார் 2 மணி நேர பஸ் பயணத்தில் உள்ளது திருவனந்தபுரம். இங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது ஆற்றுகால்(ஆற்றிங்கல்)..  



அன்னைக்கு வணக்கங்கள்.. ஏதேனும் சொல், பொருள், இலக்கண பிழை இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்..
ஆன்மிகம் சம்பந்த பட்ட பதிவு ஆனதால் ஏதேனும் தவறு இருந்தால் வாசிப்பவர்கள் தனி மடலிலோ பின்னூட்டத்திலோ பிழையை சுட்டி காட்ட வேண்டுகிறேன்.....

அடியேன்
சந்தனக் கண்ணன்

12 comments:

  1. நல்ல பதிவு. எங்கள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நன்றி கௌதமன் அவர்களே

    ReplyDelete
  3. நல்லா எழுதிருக்கீங்க.. நல்ல நடை..

    பதிவின் நீளத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்க..

    வாழ்த்துக்கள்..:)

    ReplyDelete
  4. கண்ணா, நல்ல விவரிப்பு. தொடர்ந்து எழுது

    ReplyDelete
  5. தர்ஷி அவர்களுக்கு நன்றிகள் கோடி . கண்டிப்பாய் கவனம் செலுத்துவேன் ....

    நன்றி எல்.கே அண்ணா :))

    ReplyDelete
  6. ungal pani menmelum thodara valthukkal............

    ReplyDelete
  7. அட்டகாசமாக எழுதுகிறீர்கள் கண்ணன். இந்த ஏரியாவில் ஆட்கள் கம்மி. நிறைய எழுதுங்கள். கடவுள் அருளோடு எங்கள் வாழ்த்துகளும் எப்போதும் உண்டு.

    ReplyDelete
  8. எழுத்தும் எளிமையும் கைகூடி வருகிறது கண்ணன் உங்களுக்கு. செய்தியை அருமையான படங்களுடன், அட்டகாசமாக பதிவு செய்திருக்கிறீர்கள். இதே செய்தியை பேப்பரில் படிக்கும் போது தோன்றவே தோன்றாத நெருக்கம், உங்கள் பதிவைப் படிக்கும்போது தோன்றுவது உங்கள் எழுத்தின் வெற்றி.

    ReplyDelete
  9. meens அண்ணா மிக்க நன்றி :))) பத்மினி அக்கா உங்கள் வாழ்த்துக்களால் நான் நிச்சயம் உயர்வேன் :))) எல்லா புகழும் இறைக்கே போகட்டும் :))))

    ReplyDelete
  10. நல்லாருக்கு, ஃபோட்டோஸும்

    ReplyDelete
  11. ஹை லைட் கின்னஸ் ரெக்கார்டின் புகைப்படம் ..பாராட்டுக்கள் கண்ணன்...

    ReplyDelete