Wednesday, December 1, 2010

முதல் பதிவு

இதை படிக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பான மற்றும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
 வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!
 இறைவனுக்கு வணக்கம்! என் அன்னைக்கு வணக்கம் என் தந்தைக்கு வணக்கம்.

நான் இந்த புனிதமான எழுத்து துறைக்கு மிகவும் புதியவன். அதை என்னுடைய தலைப்பின் பிழையே சுட்டி காட்டி விடும்.
என்னை எழுத வைக்கும் பாமகள் அன்னை "கலைவாணி" யை வணங்குகிறேன்.
இந்த பதிவில் நான் எழுத போவது "எனக்கு பிடித்த இறை வாழ்த்து பாடல்"

ராமலிங்க அடிகளார் எழுதிய பாடல் தான் அது!
அங்கே அவர் ஒரு இடத்தில் சொல்லுவார்

"இன்றே என்னின் இன்றேயாம் "

எத்தனை சத்தியமான வார்த்தைகள்? ஆம் எத்துனை ஆழ்ந்த கருத்துகள் பாருங்கள் ...

                இறைவனை இல்லை என்று சொல்லுபவர்களிடத்தும் இறைவன் இல்லாது இருக்கிறான்.... ஆம் இறைவனை இல்லை என்று சொல்ல்பவர்களிடம் இறைவன் இல்லை என்ற வடிவத்திலே இருக்கிறான்.. எத்துணை சத்தியமான வார்த்தைகள் பாருங்கள்.

               கண்ணதாசன்  ஐயா ஒரு இடத்திலே சொல்லுவார்கள் "நாத்திகன் தன்னுடைய வாழ்நாள் முழுவதிலும் தன்னுடைய பேச்சுகள் மற்றும் வார்த்தைகளால் இறைவனை வெல்கிறான் ஆனால் இறைவன் இறுதியில் மரணம் என்னும் வடிவிலே அவனை வெல்கிறான்". பாருங்கள் எவ்வளவு ஆழ்ந்த கருத்துகள்.

                நமக்கு சொந்தமாக எழுத தான் வரவில்லை என்றாலும் இத்தகைய கருத்துக்களை நம்மை அறிய வைத்த இறைவனுக்கு கோடான கோடி வணக்கங்கள்....

நன்றி இந்த சுட்டியை படித்தவர்களுக்கு..

                 இதை படித்தவர்கள் தயவு செய்து உங்கள் கருத்துக்களை பதியுங்கள். தங்களை சிரம் தாழ்த்தி கேட்டு கொள்கிறேன்.அப்போது தான் என்னை எங்கு எப்படி திருத்த வேண்டும் என்று எனக்கு தெரியும். அதனால் தான் இத்துணை வற்புறுத்தல்கள்.

இது தான் என்னுடைய முதல் முயற்சி.... அந்த இறைவனுக்கு மிக்க நன்றி..

சுகிசிவத்தின் அதே முதல் வார்த்தைகள்.........


"இறைவன் என்னை நன்றாக படைத்தனன் . என்னை நன்றாக தமிழ் செய்யுமாறு " ... யார் சொன்னால் என்ன நல்ல குறிப்புகளை பயன்படுத்தி கொள்ளலாமே .........


அடியேன் 
சந்தனக் கண்ணன்.........