Tuesday, May 10, 2011

இறைவன் ஒருவரே


இறைவன் ஒருவரே

       மதங்கள் எதுவாக இருந்தாலும் இறைவன் ஒருவராகவே இருக்க வேண்டும். செல்லும் பாதை வெவ்வேறாக இருப்பினும் சென்று அடையும் இலக்கு ஒன்று தான். அதையே முக்தி என்று அழைக்கிறது நம் இந்து மதம்.
       பழமையும் புதுமையும் போற்றும் நம் இந்து மதத்தில் தான் எத்தனை எத்தனை தெய்வங்கள் .. அது ஏன் என்ற ஐயம் அனைவருக்கும் இருந்து கொண்டே தான் இருக்கும் .. சரி தானே ?
       நம் மனம் தான் இறைவனை பிரித்து வைத்து உள்ளது. இறைவன் ஒருவரே.

         எந்த மதத்தை எடுத்து கொண்டாலும் இறைவன் ஒருவர் தான் என்பதை சற்றே ஆழ்ந்து சிந்தித்தால் விடை கிடைத்து விட போகிறது.
ஒருவராயின் அவர் பெயர் ??? அவர் யார் ? அவர் ஆணா இல்லை பெண்ணா ??? அவர் தன்மை என்ன ? அவர் வடிவம் என்ன ??
அவர் தான் பரப்ரம்மம். அவர் ஆணும் அன்று பெண்ணும் அன்று. அது பூரணத்துவம் . அனைத்தும் அவரே. அவருக்கு வடிவம் கிடையாது. பஞ்ச பூதங்களும் அதற்க்கு மேற்பட்ட தன்மையும் அவருக்கு உண்டு. அப்படியானால்  அவரை எப்படி வணங்குவது? எப்படி உணர்வது ?
சற்றே கடினம் தான் . ஆழ்மனதின் அமைதியில் நின்று த்யானத்தில் வணங்க வேண்டும் அவரை. அவரின் வடிவத்தை நாம் உணர்ந்து கொள்ள காலம் அதிகம் ஆகும். தெரிந்து , புரிந்து கொள்ள நாம் ஆன்மீகத்தில் சிறிது தூரம் செல்ல வேண்டி உள்ளது. அதனால் தான் நாம் முதலில் உருவமாய் வடிவமாய் நாம் உணர்ந்து கொள்ள புரிந்து கொள்ள உள்ள வடிவங்களில் உணர்த்து அவர்கள் அருளால் சற்றே ஆன்மீகத்தின் உள்ளே சென்று பின் இவர்களை அடைய வேண்டும்.

       இந்த பரப்ரம்மதிற்க்கும் கோவில் உள்ளது இந்திய திருநாட்டில். கடவுளின் சொந்த நாடு என்று அழைக்கப்படும் கேரளத்தின் கொல்லதிற்க்கு அருகில் உள்ள ஓச்சிரா என்னும் இடத்தில உள்ளது பரப்ரமம் கோவில்.
ஏழை சிறுவன் ஒருவனுக்கு பரப்ரம்மம் காட்சி அளிக்க அந்த சிறுவனால் அவரை உணர்த்து கொள்ள முடிய வில்லையாம். உடனே அருகில் இருந்த போத்து(எருமை மாடு ) வடிவில்  காட்சி கொடுத்தாராம் பரப்ரம்மம்.
அந்த வடிவிலயே( நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் அல்லவா ) உற்சவ காலங்களில் வருகிறார்.      அது போல உருவம் அற்ற நிலையில் உள்ள இறைவனையும் பல இடங்களில் வணங்கலாம் . சிதம்பரம் கோவிலில் உள்ள ரகசியம்(இறைவன் ஆகாய வெளியாய் ) இருக்கிறார். மேலும் திருவாரூர் கமலாம்பிகை சந்நிதானத்தில் உள்ள பீடம் (யாரும் நம் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்து கொள்ளலாம்).

      இவை எல்லாவற்றிக்கும் மணிமகுடமாய் லலிதா சஹாஸ்ரநாமத்தின் அன்னை லலிதை காமேஸ்வரனை உள்ளடக்கிய( உள்ளார்ந்து விளங்கும் ) காமேஸ்வரியாய் ஆண்-பெண் வடிவ பாகுபாடு இன்று வணங்க படுகிறாள்.

[ அன்னை லலிதையாய் விளங்கும் தலங்களை அடுத்த பதிவில் பார்க்கலாம்]
பரபிரம்மமமே போற்றி போற்றி 
அன்னைக்கு வணக்கங்கள்.. ஏதேனும் சொல், பொருள், இலக்கண பிழை இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்..
ஆன்மிகம் சம்பந்த பட்ட பதிவு ஆனதால் ஏதேனும் தவறு இருந்தால் வாசிப்பவர்கள் தனி மடலிலோ பின்னூட்டத்திலோ பிழையை சுட்டி காட்ட வேண்டுகிறேன்.....

அடியேன்
சந்தனக் கண்ணன்Monday, May 2, 2011

தவம்     தவம் செய்தால் என்னதான் கிடைக்கும்?தவம்  எதற்கு ? தவம் செய்தல் என்றால் அறிவில் உயருவது என்று பொருள் கொள்ளலாம். தவம் செய்தலால் மன வலிமை , மனோ தைரியம் திடம் முதலானவை கிடைக்கும்.
வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய் தவம்.
எண்ணிய எண்ணியாங்கு எய்துபவர் எண்ணியர்
திண்ணிய ராகப் பெறின்.
என்பது அய்யன் வள்ளுவன் வாக்கு ...
     ஆம் தவம் இருந்தலால்  நாமும் எண்ணிய என்னத்தை ஈடேற்றி கொள்ளலாம். ஆயினும் அதனுள் ஒரு ஆழ்ந்த உண்மை உள்ளது. இறை தவத்தில் உண்மையாக நாம் ஈடு பட்டோமேயானால் பலனை அடையும் நேரத்தில் நாம் அதை விரும்பும் எண்ணத்தில் இருந்து விலகியே இருப்போம். ஆம் அந்த அளவு நம் மனதை சீர் செய்து அதன் பக்குவத்தை உயரத்தி தருவதும் தவமே. அதையும் மீறி அந்த பக்குவத்தை அடையாதவர்கள் போய் சேர்ந்த பாதையை பற்றியும் புராண இதிகாசங்கள் நமக்கு எடுத்துரைக்கும்.

     ஆழ்ந்து சொன்னால் எண்ணங்களுக்கு வலிமை அதிகம் . உண்மையாக தவம் செய்தால் எண்ணங்கள் வலிமை அடையும். எண்ணம் ஈடேறும்.
[யத்பாவம் தத்பவதி- வேதம்  ]
     சரி இப்படி தவத்தின் வலிமைகள் உள்ளனவே . இதை நமக்கு உணர்த்த ஒரு தெய்வம் இருக்க வேண்டும் அல்லவா ??? இவ்வாறு பல இடங்களில் இறை வடிவங்கள்( பெருமாள், நாச்சியார், அன்னை, தேவர்கள், முருகன்)  தவத்தின் பலனை நமக்கு எடுத்து சொல்லி தருகின்றனர். இமவான் மகளான அன்னையும், பர்வதன் மகள் தாம் பார்வதியும் தவம் செய்தே பலனை பெற்றனர். அது போல காஞ்சி, ஆனைக்கா இப்படி பல இடங்களில் அன்னை தவம் செய்து இருக்கிறாள் என்பது புராணம்.
     பல இடங்களில் அன்னை தவம் இருத்தல் பெரும்பாலும் இறைவனை அடைய அல்லது அசுரரை அழிக்க என்று இருக்கும் . ஆனால் ஒரு தலத்தில் இறைவன் ஒருவனே என்று உணர்த்த அவள் தவம் இருக்கிறாள். ஹிந்து வழிபாட்டு முறையில் சைவமும் வைஷ்ணவமும் சிறப்பாக உள்ளது. காலத்தின் கோலத்தால் சில நேரங்களில் அவர்களுக்குள் யார் பெரியவர் என்கிற பிரச்சனைகளும் வந்தது உண்டு. அதனால் தான்
     அரியும் சிவனும் ஒன்னு ..
     இதை அறியாதவன் வாயுல மண்ணு என்னும் படியான சொல்லும் வந்தது.
     மதுரையிலும் சிவனே பெருமாளாய் வந்த கதையும் உண்டு . இவை எல்லாவற்றிக்கும் மேலாக சங்கரநாராயணர்(அரி-சிவன்) வடிவம் இந்த ஒற்றுமைக்கு ஒரு அடித்தளம்.
“ஒன்றே என்னின் ஒன்றேயாம்

     இந்த வடிவத்தை காணவே ஒரு அன்னை தவம் இருந்தாள். ஆம் மக்களின் நலனுக்காக இந்த உண்மையை மக்கள் உணர வேண்டும் என்று அறியையும் சிவனையும் ஒன்றாய் காண்பேன் என்று ஒற்றை காலில் நின்று தவம் செய்து தவத்தின் பெருமையை உணர்த்திய அன்னை தான் கோமதி.

கோமதி – ஆம் சங்கரன்கோவிலின் அரசி.
     சங்கரன் கோவில் – நெல்லை மாவட்டத்தில் உள்ள இந்த ஊரின் பிரதான தெய்வமாய் தவத்தின் மணிமகுடமாய் , தவத்தின் பலனாய் சங்கரநாரயணரும் காட்சி தர சங்கரலிங்கதோடு அருளாட்சி புரிகிறாள் அன்னை.
      மாதத்தின் கடைசி வெள்ளிகிழமைகளில் அன்னைக்கு தங்க பாவாடை சார்த்த படுகிறது. 
        பாரதியும் கோமதி மகிமை என்னும் தலைப்பில் பாடல்கள் எழுதி இருக்கிறார். 
     சங்கரன் கோவில் ஒரு பிரார்த்தனை தலமும் கூட . சுற்றுவட்டாரத்தில் மக்கள் எங்கும் பாம்பை கண்டால் ஒரு முறை சங்கரன்கோவிலுக்கு செண்டு விட்டு வருவார்கள். மேலும் பல ஊர்களில் கோமதி, ஷங்கர் என்னும் பெயர்கள் வைக்கும் பழக்கமும் உள்ளது.
     அன்னை சிறு பெண் வடிவத்தில் கண்ணுக்கு நிறைவாக இருக்கிறாள். ஸ்ரீசக்கர குழியும் உண்டு இந்த தலத்தில்.     ஆடி மாதம் அன்னை தபசு (தவம்) இருந்து சங்கர நாரயணரை காண்பாள். அவள் தவசு இருக்கும் காலத்தில் நாமும் சென்று அவளை வழிபாட்டு நம் கோரிக்கையை சொன்னால் தட்டாது நிறைவேற்றும் அன்னை இவள். அன்னை வரப்பிரசாதி என்பதை ஒவ்வொரு ஆண்டும் கூடும் கூட்டமே சாட்சி.
மேலும் கோமதியின் உண்மையான பக்தர்கள் அவர் பெயர் சொன்னாலே கண் கலங்கும் அளவுக்கு அவள் அருலாடல் செய்து உள்ளாள் என்பதற்கு சாட்சி.
ஆக அன்னை விளக்கும் தத்துவம் தான் என்னே ??
     சுயநலம் கருதாது உலக நன்மைக்காக செய்யும் எந்த ஒரு விஷயமும் தோல்வியுற்றதாய் சரித்திரமே இல்லை. மேலும் செய்யுங்கள் தவம் அந்த ஆற்றலை, மனதிடத்தை நான் வழங்குகிறேன்.
     மேலும் ஆன்மீகத்தில் நாட்டம் கொள்ளும் நாம் முதலில் வைஷ்ணவம், சைவம் என்ண்டும் இரு பேரு தூண்களில் சிக்கி அதுவா இதுவா என்னும் குழப்பத்தில் இருக்கும் காலத்தில் நம் மனத்தை சீர் செய்து இருவரும் ஒருவரே என்று உணர்த்தி நம்மை மேன்மை படுத்துகிறாள் அன்னை கோமதி.

கோமதி தாயே சரணம் .. உன் பாதார விந்தங்களே போற்றி போற்றி ....
அன்னைக்கு வணக்கங்கள்.. ஏதேனும் சொல், பொருள், இலக்கண பிழை இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்..
ஆன்மிகம் சம்பந்த பட்ட பதிவு ஆனதால் ஏதேனும் தவறு இருந்தால் வாசிப்பவர்கள் தனி மடலிலோ பின்னூட்டத்திலோ பிழையை சுட்டி காட்ட வேண்டுகிறேன்.....

அடியேன்
சந்தனக் கண்ணன்