Thursday, January 27, 2011

அடியேன் தேடிக்கண்டுகொண்டேனே


அடியேன் தேடிக்கண்டுக்கொண்டேனே

என்ன எழுத்து சித்தர் பாலகுமாரனின் தலைப்பு போல் இருக்கின்றதோ? அதே தான். நான் பார்த்து தேடி (மன்னிக்கவும் என்னை தேட வைத்து) கண்டு கொண்ட(ஆட்கொள்ளப்பட்ட) ஒரு அம்பிகையை பற்றி தான் இந்த பதிவு .
இந்து மதம் மிக புராதானமானது. பழமையும் பெருமையும் அதன் இரு தூண்கள். பல வழிகளில் இந்து மதத்தின் தொன்மையை சற்றே பார்க்கும் போது  மனம் பிரம்மிக்க தான் செய்கிறது . என்னை பொறுத்த வரை அதற்கு  உண்மையான காரணம் எது என்று எண்ணினால் அது பெண் வழிபாடாக இருக்கலாம். ஆக பெண்மையை, அதன் புனிதத்தை போற்றும் வகையில் நாம் ஒவ்வொரு  கோவிலிலும் அம்பிகையை (நாச்சியாரை ) வெவ்வேறு வடிவங்களில் போற்றி வணங்குகிறோம். ஆக அன்னையின் ஆயிரம் வடிவங்களில்(என் சித்தம் முழுதும் உள்ள வடிவங்களில்) இரண்டு வடிவம் உள்ள கோவிலை பற்றி பார்போமா ?? வாருங்கள் என்னுடன்........
திருவாரூர்.......... மாவட்டம் என்று வடிவம் எடுத்துள்ள இடம்.. இங்கு மணிமுத்தாறு நதியும் கமலாலயக் குளமும் வளம் சேர்க்க அங்கு நடுநாயகமாய் இரண்டு அம்பிகைகள்.
திருவாரூர் என்றதும் நினைவிற்கு உடனே வருவது ஆழித்தேரும் தியாகேசரும் தான். பின்ன மால் வழிபட்ட மூர்த்தம் அன்றோ ? சிறப்பு இல்லாமல் இருக்குமோ ?

சிவபிரானே ஆலால சுந்தரரிடம் பொன்னை பத்திரமாக எடுக்க சொன்ன கமலாலய குளமும் உள்ள புண்ணிய பூமி அன்றோ?
கோவிலின் குளத்தின் நடுவுலயே ஒரு கோவில் (நடுவாங்கோவில் ) உள்ள பூமி.

  {மேலும் இந்தக் கோவிலின் சிறப்பை இந்த பதிவில் பார்க்கவும்
http://aanmiga-payanam.blogspot.com/2010/02/blog-post_15.html  [நன்றி பதிவு எழுதிய நல்ல உள்ளத்திற்கு(கீதா சாம்பசிவம்)}
சரி மற்ற சிறப்புகளை அந்த பதிவில் பார்த்தீர்களா ?? நாம் நம்முடைய விஷயத்திற்கு வருவோம்.
இந்த பூமிலே ஒரு பெண்ணாக பிறந்தவள் இறைவனை அடைய இரண்டு வழிகள் உண்டு
·                     நல்லறமாக இல்லறம் நடத்தி இறைவனை அடைவது
·                     யோக வடிவில் துறவறம் மேற்கொண்டு இறைவனை அடைதல்
சற்றே வேத காலத்தில் பார்த்தால் பெண்களை மேலே சொன்ன இரண்டு வடிவில் சொல்லி இருக்கிறார்கள் ஸத்தியோவோது மற்றும் பிரஹ்மாவாதினி  தான் மேலே சொன்ன இரு வகை பெண்கள்.
சரி இந்த கதை ஏன் இங்கு எதற்கு என்று எண்ணுவது புரிகிறது?
இந்த கோவிலில் இரண்டு அம்பிகைகள் இருவரும் இந்த இரண்டு வகை பெண்களின் வடிவம்
இந்த கோவிலில் எத்துனை முக்கியம் தியகராஜரோ அத்துனை ஏன் அதற்கும் மேல் முக்கியம் உள்ளவள் அன்னை கமலாம்பிகை. மேலே சொன்ன பெண்களில் இந்த அன்னை யோக வடிவம் கொன்டவள். ஆம் யோகத்திற்க்கே உள்ள அன்னை இவள். இந்த அன்னை வித்யாச வடிவம் கொன்டவள். இவள் பிறை சூடி கங்கை அணிந்து நந்தி வாகனம் கொண்டு தனிக்கோவிலில் கொடிமரம் கொண்டு இருப்பவள். இவளின் வடிவம் பார்போமா??கிழக்கு(வடகிழக்கு) நோக்கி எழுந்தருளும் நம் அன்னை  நான்கு கரத்தினள். மேல் கரங்களில் ஒன்றில் பாசக்கயறு மற்றொன்று அக்ஷயமாலை. கீழ் கரத்தினில் வலது கரம் தாமரையை தாங்க இடது கரமோ தாங்கு கரமாய் அம்மையின் இடையை பற்றி கொள்கிறது. ஆனால் அலங்காரத்தில் மேல் கரங்கள் தெரியாது.
கமலம்பிகையின் திருவடிகள் வியப்புறு வண்ணம் உள்ளன. ஒரு கால் மீது மற்றொரு கால் இட்டு யோகாசனத்தில்(த்யானத்தில் யோக வடிவில்) இருக்கிறாள். இந்த கோலத்துக்கே “சிவயோகம் அல்லது சிவராஜயோகம் அல்லது வீரராஜயோகம் என்று பெயர். அதாவது சின்னஞ்சிறு பெண் போலவும் அதே நேரத்தில் அண்ட பகிரண்டமும் கரைக்கண்ட ஞான உச்சமும் கொன்டவள்.
இந்த அன்னையும் லலிதையின் வடிவமாகவே எனக்கு தோன்றுகிறது. ஏன் எனில் அன்னையின் பெயரில் உள்ள க கலைமகளையும் ம மலைமகளையும் ல அலைமகளையும் குறிப்பிடுவது மட்டும் அல்லாமல் சரஸ்வதி தேவி அக்ஷமாலை தாங்குபவள். உமையவள் பாசத்தையும் லக்ஷ்மி தாமரையும் தாங்குபவள் ஆனால் இங்கு அன்னையோ மூன்றையும் வைத்து இருக்கிறாள். ஆக அவள் மூன்று அன்னையையும் உள்ளடக்கிய ஒரே வடிவமாய் இருக்கிறாள் அன்னை.
பிறையும் கங்கையும் சூடியவள்(ஆமாம் யோகிகளின் திருமுடி குளிர்ந்து இருக்கும் பிரகாசமாகவும் இருக்கும்). நந்தி வாகனம் கொன்டவள்
(சிவாம்சமும் பொருந்தியவள் பின்னே லலிதை என்றும் காமேஸ்வரனை உள்ளிலே கொன்டவள் தானே). தனி மண்டபத்தில் சங்க,பதும நிதி வாயிலை காக்க ஆட்சி புரிகின்றாள்.
உற்சவர் மனோன்மணி. (மனோன்மணி அன்னையை பற்றி பின் ஒரு தனி பதிவு போடுகிறேன் ). அத்துணை சிறப்பு இந்த பெயருக்கு. சுருக்கமாக மனங்களை தட்டி எழுப்புபவள்.
சரி யோக வடிவை தரிசித்தோம். செல்வோமா இல்லற வடிவை பார்க்க???இரண்டாம் பிரகாரத்தில் இருக்கிறாள் இந்த அன்னை. நீலோத்பலாம்பிகை. தூயத் தமிழில் அல்லியங்பூங்கோதை. பெயரில் இருந்தே கையில் அல்லி(குவளை) ஏந்தியவள் என்று புரியும் ஆம் சரி தான். கருங்குவளையை ஏந்தியவள் வலது கரத்தில். இடது கரமோ ஆனந்தத்தின் பிறப்பிடம், உத்வேகத்தின் தேன்கிண்ணம். ஆம் சேடி பெண் ஒருத்தி முருகனை கையில் தூக்க அவனது பிஞ்சு விரலை பற்றி இருக்கிறது அன்னையின் கரம்.
ஆம் அன்னையின் முகத்தில் ஆயிரம் கோடி சூர்ய ஒளி. பின்னே இருக்காதா ?? உலகத்துக்கே நாயகி ஆனாலும் தன் பிள்ளையை கையோடு வைத்த ஆனந்தம்.
ஆக இதன் உள்ளார்ந்த விளக்கம் தான் என்ன ?? இந்த உலகத்தில் உள்ள எல்லா உயிரும் அன்னை பராசக்தியின் பிள்ளை அன்றோ ? மகனே நான் இருக்கிறேன் உன்னை கை பிடிக்க கரம் பற்றி நான் காப்பேன் என்று அவள் புன்சிரிப்பு காட்டுகிறது. அன்னை வரப்ரசாதி. இவளுக்கு தனி சிவ மூர்த்தம் இல்லை.
அன்னை கமலம்பிகயோ யோக நெறிக்கு வழிக்காட்ட இவளோ இல்லற நல்லறத்துக்கு வழி வகுக்கிறாள். ஆக இருவர் நோக்கமும் ஒன்றே ஒன்று தான் .. ஜீவ உஜ்ஜீவனம். ஆம் என் மக்களாகிய நீங்கள் நன்றாக வாழ வேண்டும். நான் இருக்கிறேன் அஞ்சாதே..
பல கோவில்களில் அன்னை கட்டிய வலம்பித முத்திரையுடன் இருப்பதே இதை சொல்ல தான் ஆனால் இங்கோ அன்னை ஒரு படி மேலே வந்து சொல்லுகிறாள்...

அன்னைக்கு வணக்கங்கள்.. ஏதேனும் சொல், பொருள், இலக்கண பிழை இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்..
ஆன்மிகம் சம்பந்த பட்ட பதிவு ஆனதால் ஏதேனும் தவறு இருந்தால் வாசிப்பவர்கள் தனி மடலிலோ பின்னூட்டத்திலோ பிழையை சுட்டி காட்ட வேண்டுகிறேன்.....

அடியேன்
சந்தனக் கண்ணன்

16 comments:

 1. புதிய தகவல்கள்.. நன்றி கண்ணன்..

  ReplyDelete
 2. அருமை கண்ணன் :)))))

  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 3. அருமையாய் எழுதி இருக்கீங்க. மீண்டும் ஒரு முறை வரேன். நன்றி என்னுடைய பதிவின் சுட்டி கொடுத்தமைக்கும்.

  ReplyDelete
 4. very interesting................

  ReplyDelete
 5. really very good info with wonderful tamil

  ReplyDelete
 6. தெளிந்த பன்னீர் போன்ற எழுத்து நடை.
  அற்புதமாய் சொல்லியுள்ளீர்கள்.
  விஷயங்கள் புதுசு, படிக்கவும் சுவை.
  கிட்டத்தட்ட சுற்றிப் பார்த்ட உணர்வைக் கொடுத்தது
  உங்களின் இந்தப் பதிவு.
  நன்றி...!

  ReplyDelete
 7. அருமையான எழுத்து. அழகான படங்கள். அற்புதம்..!

  ReplyDelete
 8. அருமையாய் எழுதி இருக்கீங்க. மீண்டும் ஒரு முறை வரேன். நன்றி என்னுடைய பதிவின் சுட்டி கொடுத்தமைக்கும்.

  ReplyDelete
 9. அழகான,நேர்த்தியான தங்களின் எழுத்து நடை கட்டுரைக்கு சிறப்பு சேர்க்கிறது கண்ணன்..
  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 10. தம்பி. வணக்கம்.
  இத்தனை நாளாய் எப்படி கவனிக்காமல் விட்டேன். பாராட்டுக்கள்.
  அம்பிகையின் அருள் சுரக்கிறது உங்கள் எழுத்துக்களில்.
  சிவனருள் பொலிக என வாழ்த்துகிறேன்.

  அஷ்வின்ஜி.
  www.vedantavaibhvam.blogspot.com
  www.frutarians.blogpsot.com

  ReplyDelete