கோதை – ஆண்டாள்
மார்கழி என்றாலே ஆண்டாள் திருப்பாவை
தான் நினைவுக்கு வரும். அப்படி கண்ணனே சொன்ன “மாதங்களில் நான் மார்கழி” என்னும்
உயரிய மார்கழியின் நாயகியாகவே விளங்குகிறாள் இந்த சூடி கொடுத்த சுடர் கொடி.
திருவில்லிபுத்தூர் – ஆம்
சங்கரன்கோவில், ராஜபாளையம் – வழி மதுரை செல்லும் பாதையில் உள்ள ஒரு ஊர் . அப்படி
என்ன பெருமை இந்த ஊருக்கு மற்ற எல்லா ஊரை விட என்று கேட்டால், அதற்க்கு பதில் நிச்சயம் உண்டு! ஆம் இந்த ஊரில் தான் வாழ்ந்த , வாழ்ந்து
கொண்டிருக்கும் மனித தெய்வம், அரங்கனுக்கே மனைவி ஆகி பெருமை சேர்த்த ஊர்.
என்றும் சொல்லுவார்கள் ..அதாவது நாம் என்னவாக வேண்டும், எது நடக்க
வேண்டும் என்று நினைக்கிறோமே, நினைத்துகொண்டே இருக்கிறோமே அதுவாகவே நாம் ஆகிறோம் .. அதனால் தான்
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்றும் , மாந்தர் தம் உள்ளத்தனையது உயர்வு என்று பொய்யா
புலவன் சொல்லி இருக்கிறான்.
மெய்ஞானத்தின் கூற்று படியும்
நம்மை சுற்றி நம் எண்ண அலைகள் சென்று கொண்டு இருப்பதாகவும் . அதற்கு தாக்கம்
அதிகம் என்று சொல்லுவார்கள். நாம் நல்லவை எண்ணி நல்லவற்றை செய்து வந்தோமேயானால்
அந்த எண்ணங்களின் வலிமையே நம்மை நல்ல நிலைக்கு கொண்டு செல்லும் என்பது உள்ளங்கை
நெல்லிக்கனி போன்ற உண்மையாவது ஆகும் .
அது போல கண்ணூறு கழித்தல்,
இறந்த வீட்டுக்கு சென்று வந்தால் குளிப்பது போலவை எதிர்மறையான எண்ணங்களை {அதன்
தாக்கத்தை மாற்ற} என்றும் சொல்லுவார்கள் .
சரி இந்த கதைகளுக்கும் ஆண்டாளுக்கும் என்ன
சம்பந்தம் என்று கேட்டால் அதற்கு பதில் இருக்கிறதே, ஆண்டாள் பெரியாழ்வார்
தோட்டத்தில் துளசி மடியில் {மகா லக்குமியின் அவதாரமாகவே , பூமி பிராட்டி மடியில்} அன்றலர்ந்த
தாமரை போன்ற முகத்தோடு கிடைக்க பெற்றவள்.
அவள் சிறு பிராயம் முதலே பெரியாழ்வார் சொன்ன கண்ணன் லீலை கதைகளை கேட்டு, அந்த
கண்ணனையே மணப்பேன் என்று உறுதியாக இருந்தாள். அந்த எண்ணத்தை தன மனதில் வைத்தே
வாழ்ந்தும் வந்தாள். ஆண்டாள் சிறு குழந்தை முதலே தன்னுடைய எண்ணத்தில் வலிமை
உள்ளவளாக இருந்தாள்.
ராமன் இருக்கும் இடம் தான்
சீதைக்கு அயோத்தி என்பார்கள். அது போல கோதை தான் பிறந்த வில்லிபுத்தூரயே பிருந்தாவனமாக
பாவித்து, தன்னுடைய தோழிகளயே கோபிகைகளாகவும், அங்குள்ள பொய்கையையே யமுனையாகவும் ,
வடபத்திரசாயியயே கண்ணனாகவும் {சரி தான் வடபத்ரம் – ஆலிலை சாயி – துயில்பவன் அதாவது
ஆலிலையில் துயில்பவன் ஆம் கண்ணன் தானே }
மார்கழி மாதத்தில் பாவை நோம்பு நோற்று அந்த
கண்ணனையே {ரங்கனயே} மணந்தும் காட்டினாள்.
எண்ணிய எண்ணியாங்கு எய்துபவர்
எண்ணியர்
திண்ணிய ராகப் பெறின்.
என்பதற்கு மிக சீரிய எடுத்துக்காட்டு
ஆண்டாள் தான் . ஆகவே உயர்ந்த எண்ணங்களை எண்ணுதலும், நினைத்த காரியம் நினைத்த உடனே
நடக்கவும் ஆண்டாள் வழிபாடு சிறந்தது.
தன்னுடைய தயா உள்ளதை, தாயன்பை
, நன்றி நவிலலை ஆண்டாள் தன்னுடைய அர்ச்சை கலைத்து நிரூபித்தும் உள்ளாள்.
அவள் தன்னுடைய நாச்சியார்
திருமொழியிலே ஒன்பதாவது பாசுரத்தில் தனக்கு பெருமாளோடு திருமணம் நடந்தால் மதுரை
அழகருக்கு நூறு தடா{அண்டா} வெண்ணையும் அக்கார அடிசில்{சர்க்கரைப் பொங்கல் } தருவதாய்
வாயால் நேர்ந்து இருந்தாள்.
நாறு நறும்பொழில்மா லிருஞ்
சோலை நம்பிக்கு, நான்
நூறு தடாவில் வெண்ணைய்
வாய் நேர்ந்து பராவிவைத்தேன் ,
நூறு தடாநிறைந்த அக்கார
வடிசில்சொன்னேன்,
ஏறு திருவுடயோன் இன்று
வந்திவை கொள்ளுங்க்கொலோ!
ஆனால் இந்த வேண்டுதல் நடத்துவதற்கு முன்னமே அவள்
நாச்சியார் ஆகி விட்டாள். இப்படி இருக்கும் காலத்தே கோதைக்கு பின் வந்த வைணவ
மரபின் “திருப்பாவை ஜீயர்“ எம்பெருமானார் ராமானுஜர் கோதையின் பாசுரத்தை படித்து
ஐயோ ஆண்டாளின் ஒரு நேர்ச்சை மீதம் உள்ளதே என்று எண்ணி ஆண்டாளுக்காக அவரே அந்த
நேர்ச்சையை{பொன் வட்டிலில் நூறு தடா வெண்ணையும் நூறு தடா அக்கார அடிசிலும்}
முடித்து வைத்தார். நேர்ச்சை முடிந்து அவர் திரு வில்லிபுத்தூர் வருங்கால் சூடி
கொடுத்த கோதை பிராட்டி தன அர்ச்சை{சிலா வடிவம் } கலைத்து வலது பாதத்தை ஒரு அடி
முன் வைத்து வாருங்கள் எம் அண்ணாவே என்று அழைத்தாளாம்.
நன்றி மறப்பது நன்றன்று என்னும் சீரிய வாக்கினிற்க்கும் எடுத்துக்காட்டாய்
விளங்கி இருக்கிறாள் கோதை பிராட்டி.
ஆக கோதை வழிபாட்டால் சீரிய எண்ணங்களும், சிறப்பான
வாழ்வும், எண்ணியவை எண்ணியபடியே நினைத்த நேரத்தில் நிறைவேறவும் செய்யும்.
ஆண்டாள் வில்லிபுத்தூரில் வாழ்ந்த வீடே
ஆண்டாள் சன்னிதியாக தனி கோவிலாக விளங்குகிறது. உள்ளே அர்ச்சா ரூபத்தில் ரங்கனும்
அந்த ரங்கனயே ஆண்ட ஆண்டாளும் காட்சி தருகிறார்கள்.

அவளுக்கே உரிய இந்த மார்கழி மாதத்தில் அவளை வணங்கி நம்முடைய எண்ணத்திற்கும் மனதிற்கும் முழு வலிமை கொடுத்து வாழ்வில் வெற்றி பெறுவோமாக.
கோதை நாச்சியாரே சரணம் ! ஆண்டாளின் பாதார
விந்தங்களே போற்றி போற்றி !!!
ஆண்டாள் - பக்தி, வைராக்கியம் , அன்பு முதலானவற்றிக்கான தெய்வம்.
அன்னைக்கு வணக்கங்கள்.. ஏதேனும் சொல், பொருள், இலக்கண பிழை இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்..
ஆன்மிகம் சம்பந்த பட்ட பதிவு ஆனதால் ஏதேனும் தவறு இருந்தால் வாசிப்பவர்கள் தனி மடலிலோ பின்னூட்டத்திலோ பிழையை சுட்டி காட்ட வேண்டுகிறேன்.....
அடியேன்
சந்தனக் கண்ணன்
அருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅருமையான படங்கள். அருமையான விளக்கங்கள். வாழ்த்துக்கள் கண்ணன் !!.
ReplyDeleteநல்ல படங்கள்.. நல்லா எழுதியிருக்கீங்க கண்ணன் வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்துகள்
ReplyDeleteபடித்துக்கொண்டே இருக்கலாம் போல இருக்கு! அற்புதமான பதிவு!!!
ReplyDeleteசந்தனக் கண்ணன் ஐயா, படங்களும் பதிவும் மிகவும் நன்றாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.
ReplyDeleteமிக்க நன்றி அழகர் அண்ணா, ஷிவா அண்ணா, அரிச்சந்திரன் அண்ணா ,தர்ஷி அக்கா, ஸ்வேதா அக்கா மற்றும் தவமணி புதல்வன் ஐயா அவர்களே.
ReplyDeleteகோதை நாச்சியாரே சரணம் ! ஆண்டாளின் பாதார விந்தங்களே போற்றி போற்றி !!!
ReplyDeleteமிக அருமையான பகிர்வுக்கு வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..
@இராஜராஜேஸ்வரி : மிக்க நன்றி :)))
ReplyDelete//
ReplyDeleteயத்பாவம் தத்பவதி
என்றும் சொல்லுவார்கள் ..அதாவது நாம் என்னவாக வேண்டும், எது நடக்க வேண்டும் என்று நினைக்கிறோமே, நினைத்துகொண்டே இருக்கிறோமே அதுவாகவே நாம் ஆகிறோம் .. //
;)))))
ஸ்ரீ ஆண்டாளைப்பற்றிய அருமையான பதிவு. அழகழகான படங்கள்.
பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள்.
vgk
அற்புத பதிவு காலம் கடந்தவற்றையும் சுட்டிகாடியா விதம், படங்கள் மிகவும் அழ்கு வாழ்க நின் சேவை வளர்க நின் பணி
ReplyDeleteGreat work
ReplyDelete