Sunday, June 19, 2011

காந்திமதி


காந்திமதி

     நெல்லை . ஆம் இது அல்வாவிற்க்கு மட்டும் சிறப்பான ஊர் இல்லை. ஆன்மீகத்திற்கும் சிறப்பான ஊர் தான். தன் பொருநை என்னும் தாமிரபரணி பாயும் புண்ணிய பூமி.
     தமிழ் முனிவன் அகத்தியன் பாடி பரவிய இந்த புண்ணிய பூமியில் ஊரின் மையத்தில் (டவுண்) பகுதியில் தன கணவராம்  முழு முதல் இறைவனாம் சிவபெருமானோடு கோவில் கொண்டு அருளுகிறாள் காந்திமதி.
     நெல்லையப்பர் கோவில் வரலாறு மிகவும் பழமையானது. அவர் முழுதும் கண்ட பாண்டியனோடு திருவிளையாடல் புரிந்து கோவில் கொண்டவர். அவரின் நாயகியாய் தனிக்கோவிலில்  குடி கொண்டு அருளாட்சி நடத்துகிறாள்.
சரி என சிறப்பு என்று பார்ப்போமா இந்த அம்பாளுக்கு ?
அன்னையின் பெயரே ஆயிரம் கோடி சிறப்பு கொண்டது.
ஆதாவது காந்திமதி =காந்தி +மதி
சரீர காந்தியில்(ஒளியில்) மதியானவள் (நிலவானவள் )
அது என்ன சரீர ஒளி?

     சரீர (தேகம் ) பொதுவாய் பலருக்கும் பல நிறங்களில் இருக்கும் . கருப்போ சிவப்போ அல்லது மாநிறம் என்றோ . தேஜஸ் என்பது ஒரு தன்மை . அது பலருக்கும் எளிதாய் கிடைப்பது இல்லை . இந்த தேஜஸ் நாம் செய்யும் கர்மம், செயல்விளைவாய் , முகத்தில் தோன்றும் பொலிவே . அதை சித்தரிக்கவே பல கடவுள் படங்களில் ஒளிவட்டம் வரைவார்கள் முகத்திற்கு பின்னால்.
     ஆனால் இந்த அன்னையோ தேஜஸ் என்னும் சரீர காந்தியில் நிலவை ஒத்தவள். அது ஏன் நிலவு ? ஒளி என்றால் சூரியன் என்று தானே ? வரவேண்டும் . அது மட்டும் இல்லாமல் நிலவு சூரியனிடம் இருந்து தானே ஒளியை பெறுகிறது. பிறகு ஏன் நிலா ?



     சூரியனின் ஒளி வெப்பம் மிகுந்தது ஆனால் நிலவோ குளிர்ந்த தன்மையை கொண்டது . அது போல் ஜெகதிற்க்கு தாயான அன்னை லலிதையின் ஒளியை அருளை வாங்கி அதை குளிர்ந்த ஒளியாய் மாற்றி நமக்கு தருவதில் வல்லவள் இந்த அன்னை . அது போல் தேஜஸ் வேண்டுவோர் இந்த அன்னையிடம் கேட்டு பெறலாம்                    

     வலது கரத்தில் பூவும் இடது கரத்தை டோல ஹஸ்தமாகவும் (தொங்க விட்ட நிலையில் ) ஒய்யாரமாக நிற்கிறாள் அன்னை . சிவபெருமானுக்கு (நெல்லையபப்ருக்கு ) வலது புறத்தில் தனி கோவிலில் (தனி கோபுரம் , தனி கொடி மரம், நந்தி வாகனம் கொண்டு காட்சி அளிக்குறாள் அன்னை ) . கடைசி வெள்ளி கிழமைகளில் தங்க பாவாடை அணிந்து மனம் நிறைகிறாள். அன்னைக்கு தங்க தேரும் உண்டு.
     நெல்லையப்பர் கோவில் மிக பெரிய கோவில் கற் சிலைக்ளும் சன்னதிகளுக்கும் பஞ்சமே இல்லை. சிவனின் தாமிர சபையும் கொண்ட பூமி. மூங்கில் தல விருக்ஷம். பெருமாளும் சிவா பெருமானின் அருகில் கோவில் கொண்டு உள்ளார்.
     தேரோடும் வீதியில் வலமும் வருவாள் , தெப்பத்தில் குடியும் இருப்பாள்(பொற்றாமரை குளம் அவள் சன்னதிக்கு அருகிலே உண்டு ) , வளைகாப்பு உற்சவமும் அன்னைக்கு நடக்கிறது இங்கே .
     அன்னை மிக மிக வரப்ரசாதி. எண்ணியதை நிறைவேற்றி தருவதில் காமதேனு இவள். 


     சுட்டெரிக்கும் சூரியன் மறையும் வேளையில் (நெல்லை வெப்ப மிகுந்த இடம்) தென்றல் வருடும் பிரகாரங்களையும் , மனதை நிறைக்கும் அருள் வழங்கும் அன்னை காந்திமதியை வணங்கி , இருட்டுக்கடை(கோவிலின் எதிரிலே உள்ளது ) அல்வாவும் வாங்கி சாப்பிட்டு விட்டு வந்தால் மனம் , உடல் மட்டும் ஆன்மாவும் லேசாகும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

அன்னைக்கு வணக்கங்கள்.. ஏதேனும் சொல், பொருள், இலக்கண பிழை இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்..
ஆன்மிகம் சம்பந்த பட்ட பதிவு ஆனதால் ஏதேனும் தவறு இருந்தால் வாசிப்பவர்கள் தனி மடலிலோ பின்னூட்டத்திலோ பிழையை சுட்டி காட்ட வேண்டுகிறேன்.....

அடியேன்
சந்தனக் கண்ணன்


6 comments:

  1. மிகவும் சுவையான அழகான பதிவு, நன்றிகள்

    ReplyDelete
  2. இதை முன்பே இந்த பூவிலே படிச்சிருக்கேன். ஆனா அப்பவே இங்கே பின்னூட்டம் போடவில்லை. ரொம்ப நல்லா இருக்கு கண்ணன். கீப் இட் கோயிங். வாழி நலம் சூழ.

    ReplyDelete
  3. ரொம்ப நாளா பதிவே இல்லை. :(((( மேல்கொண்டு எழுதுங்க. உங்கள் குலதெய்வ கோவிலுக்கு போய்வந்ததை படங்களோட எழுதுங்க கண்ணன்.

    ReplyDelete
  4. சூரியனின் ஒளி வெப்பம் மிகுந்தது ஆனால் நிலவோ குளிர்ந்த தன்மையை கொண்டது . அது போல் ஜெகதிற்க்கு தாயான அன்னை லலிதையின் ஒளியை அருளை வாங்கி அதை குளிர்ந்த ஒளியாய் மாற்றி நமக்கு தருவதில் வல்லவள் இந்த அன்னை . அது போல் தேஜஸ் வேண்டுவோர் இந்த அன்னையிடம் கேட்டு பெறலாம் /

    மிக அருமையான பகிர்வுக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete