Sunday, January 16, 2011

சோகங்கள் இல்லை உண்மையான வேதனைகள்.....

சோகங்கள் இல்லை உண்மையான வேதனைகள்.....

சமீபத்தில் எங்கள் ஊரில் உள்ள சில இடங்களுக்கு ஊர் சுற்றி பார்க்க சென்றோம் குடும்பமாக(பிக்னிக்). உண்மையை சொல்ல போனால் எங்கள் ஊர் ஒரு அற்புதமான இடம்... தமிழ்நாட்டில் ஏன் இந்தியாவில் ஏன் உலக வரைபடத்தில் கூட எங்கள் ஊரை மார்க் பண்ணி இருப்பார்கள் அபப்டி என்ன ஊர் என்று கேட்க்குரிங்க்களா??? வான் போற்றும் குமரி தான் அது...

(படங்கள் வழியில் எடுத்தவை )


உண்மையாக சொல்லப் போனால் தமிழகத்தில் இரண்டு பருவங்களிலும் மழை பெரும் ஒரே மாவட்டம்... ஆனால் மழை அழிவு என்னவோ சற்றே குறைவு தான்... அதே போல் வெயிலின் அளவும் சிறிது குறைவு தான்(தற்பொழுது கொஞ்சம் அதிகம் தான்). ஆகா இப்படி ஒரு ஊரில் ஆண்டவன் என்னை படைத்தது நிச்சயமாக அவர் எனக்கு வழங்கிய உண்மையான வரம் தான். ஏன் என்றால் அதன் பசுமையும் பெருமையும் இன்றளவும் நிலைத்து இருப்பது தான். ஆறுகளில் பழையாறும் தாமிரபரணியும்(நெல்லை பரணியும் இதுவும் ஒரே மலையின் வெவ்வேறு பகுதிகளில் உற்பத்தி ஆகிறது) கோதையும் பரளியும் வள்ளியாறும் பாயும் புண்ணிய பூமி..






ரப்பரிலோ  கொஞ்சி குலவும் வளம் கொண்டது. அதே போல் சொல்லி கொண்டே போகலாம் மீன்,நெல்,தேங்காய்,அண்டிபருப்பு, அன்னாசி பழம், பலா, பூ, பழம்  என்று கண்போரையும் கேட்போரையும் வியப்பில் ஆழ்த்தும் பூமி இது. குற்றாலம் போன்று இயற்கையாக உலக்கை அருவியும் சற்றே செயற்கையாக திற்ப்பரப்பும் கொண்ட பூமி இது. மலை வளமும் ஆறுகளின் செற்றமும் ஆன்மிக சிறப்பும் (நாகராஜா கோவில், பார் போற்றும் குமரி தெய்வம், தாணுமாலயன், வட்டாறு ஆதிகேசவன், சவேரியார் ஆலயம்,தக்கலை பீர் முகமது ஆலயம், சிதறால் சமண படிமனும்) உலகிற்கு பறை சாற்றுபவை.. இப்படி உள்ள இந்த பூமில் உள்ள இவனுக்கு என்ன கவலை என்று நீங்கள் சொல்லுவது எனக்கு புரியுது



.


இதனை சிறப்புகள் இருந்தாலும் நான் ரசிப்பது என்னுடைய குமரியின் இயற்கை அழகை தான். நான் எங்கேனும் பயணம் மேற்கொள்ளும் போது கண்ணுக்கு குளிர்ச்சி அளிக்கும் இயற்கையின் வனப்பை நான் வியந்தது உண்டு. எத்தன்னை எத்தன்னை அழகு?? இப்படி யாக உள்ள இந்த அழகு எத்தனை நாட்களுக்கு என்பது தான் என்னுடைய வருத்தம். நீங்கள் கூகிள் maps எடுத்து பார்த்தால் உங்களுக்கு தெரியும் மொத்த தமிழகத்தின் குமரி மிக தனியாக தெரியும் பச்சை பச்சை யாக? ஆனால் இவை இன்னும் எத்தனை காலத்துக்கு தான் என்று எனக்கு தெரியவில்லை ?
என்னுடைய சந்ததி தலை முளைத்து பார்க்கும் போது இவை இருக்குமா இப்பொழுதே நகரின் முக்கிய இடங்கள் கட்டிட மலையை இருக்க வயல வெளிகள் பிளாட்டுகள் ஆக நெஞ்சம் பதை பதைக்கிறது.. என்னுடைய சிறு வயதில் என் தாய் தென்னை குருத்தை எதோ ஒரு அதிசய பொருளாக தந்தார்கள் ஆனால் இன்று அது அனைவருக்கும் மிக மிக எளிதாக கிடைத்து விடுகிறது .ஏனெனில் இன்று தான் தென்னன்தோப்புகள் எல்லாம் பிளாட்டுக்களாக மாருகின்றனவே?? என்ன செய்வேன் ஆண்டவா? இனி வரும் சந்ததிகளுக்கு காட்ட இடம் ஒன்றும் இருக்காதோ?? என்ன இவன் ஏதோ புதிதாக சொல்லாமல் பழைய விஷயங்களை சொல்லுகிறான் என்று நினைக்குரீர்களா?? என்ன செய்ய இந்த மூடனுக்கு இப்பொழுது தானே அறிவு பிறந்தது J ..
கலெக்டர் அவர்களின் பிளாஸ்டிக் ஒழிப்பு சற்றே இன்னும் சொல்ல போனால் மிகவும் அற்புதமான ஆயுதம் தான். மக்களும் சற்றே பிளாஸ்டிக்கை ஒழித்து விட்டனர் என்பது ஆறுதல்.
 மேலும் நான் உங்களை விட மிக மிக பெரியவன் என்னிடம் விளையாடுபவர்கள்  மிக மிக மோசமான விளைவுகளை அனுபவிப்பிர்கள் என்று இயற்கை எச்சரிக்க தொடங்கியதாகவே எனக்கு தோன்றுகிறது சுனாமியும் இப்போது ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும். மனிதரிடம் தன்னுடைய ஆற்றலை இப்படி நிரூபித்து இருக்கிறது இந்த வெள்ளப்பெருக்கு. ஏன் அழிவு என்று சொல்லாமல் எச்சரிக்கை என்றேன் என்றால் தமிழகதிலயே அதிக மழை இந்த புயல் குமரிக்கு தந்தாலும் மனித அழிவு என்னமோ மற்ற மாவட்டங்களை பார்க்கும போறது குறைவாக இருத்தல் ஆறுதல். என்னை பொறுத்த வரை இயற்கையோடு விளையாடுதலும் தீக்குள் விரல் வைப்பதும் ஒன்று தான். அவை எல்லை மீறும் போது சேதம் என்னவோ மனித குலத்துக்கு தான்.
(குமரியின் கோர மழை காட்சிகள்)






(இவை பழையாறு தன்னுடைய கோர வடிவை காட்டியவை )
(குழித்துறை வெட்டுவன்னி சாஸ்தா ஆலயம் மழைக்கு முன் பின்)









(இவை மார்த்தாண்டம் தாமிரபரணியின் கோர வடிவம்)

ஏதேனும் சொல் பொருள் இலக்கணப்பிழை இருந்தால் மன்னிக்க இந்த அடியவன் அனைவரையும் முக்கியமாக தமிழ்தாயையும் வேண்டுகிறேன்
வாசித்த உள்ளங்களுக்கு மிக்க நன்றி
அடியவன்
சந்தனக் கண்ணன்



19 comments:

  1. அருமையான பயணக்கட்டுரை கண்ணன்
    பகிர்வுக்கு நன்றி
    நாங்கல்லாம் வாரோம் உங்க ஊருக்கு :)))

    ReplyDelete
  2. என்னுடைய எழுத்துக்களுக்கு ஊக்கம் தந்த சிட்டுக் குருவிக்கு மிக்க நன்றி... தாராளமாக நீங்கள் வரலாம் .........

    ReplyDelete
  3. நல்ல கட்டுரை !! வாழ்த்துக்கள் !!
    இப்பயணம் இனிதே தொடர வாழ்த்துக்கள் !!!

    ReplyDelete
  4. நன்றி நிக்சன் :)))))))))))))

    ReplyDelete
  5. கட்டுரை நன்று! இயற்கையின் அழிவுகள் வருத்தமையத்தான் வைக்கின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை!
    ஆயினும் வளர்ந்துவரும் மக்கள்தொகைப் பெருக்கம், விஞ்ஞான வளர்ச்சி போன்றவற்றையும் கருத்தில் கொண்டு குறைந்த பட்சம் மாற்று ஏற்பாடுகளையாவது மேற்கொள்ள முன்வர வேண்டும்!

    ReplyDelete
  6. நன்றி அருணை :))))))))))))))))

    ReplyDelete
  7. உண்மையான வருத்தம், ஒரு சில எழுத்துப் பிழைகளைத் தவிர்த்தாலே போதும், மற்றபடி உங்கள் வருத்தமும், உணர்வும் புரிகிறது. அற்புதமாய்ப் படங்கள் எடுத்திருக்கிறீர்கள். தேர்ந்த போட்டோகிராபர் என்பதும் புரிகிறது. கண்களைக் கவர்ந்தன காட்சிகள் அனைத்துமே. தாமிரபரணி என்ற பெயரில் குமரி மாவட்டத்திலும் ஒரு நதி ஓடுவதை இன்றே அறிந்துகொண்டேன். குமரி மாவட்டத்தில் நிதானமாய்ச் சுற்றுலா போகவேண்டும் என்ற என் ஆவல் அதிகமாகி விட்டது. நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  8. comment moderation கொடுத்துவிட்டு word verification ஐ எடுக்கலாமோ?? இது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே.

    ReplyDelete
  9. படமுடன் அருமையாய் பகிர்ந்துள்ளீர்கள் நன்றிகள்...

    ReplyDelete
  10. கீதா அவர்களே மிக்க நன்றி

    அன்பு சகோதரி ம.தி. சுதா அவர்களே மிக்க நன்றி

    ReplyDelete
  11. @ கீதா : நீங்கள் சொன்ன விஷயம் எனக்கு புரியவில்லை சற்றே விளக்குவீர்களா ???

    ReplyDelete
  12. அற்புதமாய்ப் படங்கள் எடுத்திருக்கிறீர்கள்.

    நல்ல கட்டுரை !! வாழ்த்துக்கள் !!

    என்றும் அன்புடன்

    வராகன்.

    ReplyDelete
  13. nice...u r well suited to put kannathasan as ur profile picture

    ReplyDelete
  14. @வராகன் : நன்றி....

    @ ராமானு"ஜம்": நன்றி..

    ReplyDelete
  15. நல்லா எழுதிருக்கீங்க கண்ணன்..:)

    வேர்ட் வெரிபிகேஷன எடுத்திருங்க காமெண்ட் போட கஸ்டமா இருக்குல்ல..:)

    ReplyDelete
  16. அருமையான சுற்றுலா சென்ற உணர்வு படங் களைப்

    பார்த்ததும் வந்தது.

    ReplyDelete
  17. உங்கள் ஊரின் சிறப்புகளை அழகுற தொகுத்துள்ளிர்கள் கண்ணன் புகைப்படங்களும் அருமை..வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  18. பல படங்கள் மிக அருமையானவை. அவற்றை நன்கொடையாகத் தந்து, 25க்கும் மேற்பட்ட மொழிகளில் உள்ள நாகர்கோவில் கட்டுரையை மேம்படுத்துங்கள். வணக்கம்.
    https://commons.wikimedia.org/wiki/Special:UploadWizard

    ReplyDelete
  19. பல படங்கள் மிக அருமையானவை. அவற்றை நன்கொடையாகத் தந்து, 25க்கும் மேற்பட்ட மொழிகளில் உள்ள நாகர்கோவில் கட்டுரையை மேம்படுத்துங்கள்.

    https://commons.wikimedia.org/wiki/Special:UploadWizard

    வணக்கம்.

    ReplyDelete