Tuesday, April 19, 2011

மனோன்மணி


மனோன்மணி

                என்ன சுந்தரம் பிள்ளையின் காவியம் நினைவிற்கு வருகிறதா ? இல்லை இவள் அன்னை மனோன்மணி...

                மனோன்மணி = மனங்களை தட்டி எழுப்புபவள்
        ஆன்மாக்களின் குற்றங்களை நீக்கிப் பரம்பொருளை அடைவதற்கு வழிகாட்டுபவள்.
                ஆக இந்து முறையில் தெய்வ வரிசையில் பெண் வடிவில் விளங்கும் சக்தி இவள். அன்னை பல இடங்களில் இந்த திருநாமத்தில் அருள் வெள்ளம் வழங்குகிறாள். திருவாரூர் நாயகியாம் கமலாம்பிகையின் உற்சவர் நாமமும் மனோன்மணி அம்மை தான் .. கமலாம்பிகயே யோகத்தின் வடிவம் .ஆக அவள் உற்சவரும் யோக வடிவினள். மேலும் நெல்லை மாவட்டம் நாங்குநேரி( வைணவ மரபில் தோதாத்ரி சீவரமங்கை) தலத்திற்கு அருகில் இருக்கும் வடக்கு விஜய நாராயணம் தலத்திலும் அன்னை மனோன்மணி சமேத மனோன்மணீஸ்வரர் ஆலயம் உண்டு.

சரி இந்த மனோன்மணி அன்னை எதற்கு ? அவளின் வேலை என்ன?
                மனித மனம் இயல்பாகவே அலை பாயும் தனிமை கொண்டது அல்லவா? மனம் ஒன்றி நாம் இறைவனோடு பொருந்தி இருந்தாலும் பல நேரங்களில் நம் மனம் மீண்டும் அதை விட்டு விலகி விடுகிறது . இப்படி மனம் பல இடங்களில் வைராக்கியத்தை இழக்கும் போது அதை மீட்டு நமக்கு தரும் அன்னை இவள்.
                அது மட்டுமா ? சாக்த மரபில்( பெண் தெய்வ வழிபாட்டில்) அன்னையின் அழகை வருணிக்கும் போது பெண்மையின் அடையாளங்கள் பற்றி சொல்ல படும் . அந்த நேரத்தில் மனம் கிளர்ச்சி அடையக் கூடாது.
அவ்வாறு மனித மனதில் தோன்றும் கெட்ட எண்ணங்களை மாற்றி மனதுக்கு இதம் அளிப்பவளாக விளங்குகிறாள் அன்னை.
இதே எண்ணத்தில் தான் அபிராமி பட்டரும் தன்னுடைய ஐந்தாம் பாடலிலும் 
“பொருந்திய முப்புரை செப்புரை செய்யின், புணர்முலையால்
வருந்திய வஞ்சி, மருங்குல் மனோன்மணி
, வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை, அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே

                இங்கே அன்னையின் திரு மார்புகளை பற்றி சொன்ன அபிராமி பட்டர் மனித மனத்தை  சீர் செய்யவே அன்னையின் திருநாமத்தை பொருத்தி இருக்கிறார்.
                மேலும் அந்த பாடலின் திரண்ட பொருளிலும் நஞ்சை அமுதாக்கிய பதம் வரும். ஆக நம்முடைய மனதில் தோன்றும் நஞ்சை (தீய எண்ணங்களை ) அமுதாக்கும் ( நல்லவையாக ) மாற்றும் அன்னை என்பதும் திண்ணமாய் விளங்கும்.
                மேலும் குண்டலினி தவ முறையிலும் மனோன்மணி தவம் வரும் . அங்கேயும் ஒரு மணியின் ஒளியை கேட்க செய்து தவம பூர்த்தி ஆகும் . அந்த பொழுதில் நம் மனதில் நினைப்பவை உடனயே நடக்குமாம்.
ஆக மனோன்மணி என்பவள் மனதை சீர் செய்து மனித மனம் நேராக இருக்க வழி வகுப்பவள். 
அன்னைக்கு வணக்கங்கள்.. ஏதேனும் சொல், பொருள், இலக்கண பிழை இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்..
ஆன்மிகம் சம்பந்த பட்ட பதிவு ஆனதால் ஏதேனும் தவறு இருந்தால் வாசிப்பவர்கள் தனி மடலிலோ பின்னூட்டத்திலோ பிழையை சுட்டி காட்ட வேண்டுகிறேன்.....

அடியேன்
சந்தனக் கண்ணன்

7 comments:

  1. ஆஹா, அருமையான பதிவு. மநோன்மணி ஒலிக்கட்டும்.

    ReplyDelete
  2. மகனே;இந்தபதிவு நல்ல ஆன்மிக தகவல் உடன் அமைந்து உள்ளது மிகவும் நன்று மென்மேலும் சிறந்துவிளங்க வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

    ReplyDelete
  3. மனசு நிறைக்கும் மனோன்மணி.
    அம்பிகையின் அருட்குழந்தையாக பரிணமிக்கும் என் அன்புத் தம்பிக்கு வாழ்த்துக்கள்.
    சிவனருள் பொலிக.
    வாழி நலம் சூழ.

    'அன்பே சிவம்' அஷ்வின்ஜி,
    www.frutarians.blogspot.com
    www.vedantavaibhavam.blogspot.com

    ReplyDelete
  4. ஃஃஃஃஃமனோன்மணி = மனங்களை தட்டி எழுப்புபவள்.ஃஃஃஃஃஃ

    ஒரு மொழி விளக்கம் பெற்றேனுங்க நன்றி..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    தேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம் (வன்னி மக்கள் கண்டுபிடிப்பு)

    ReplyDelete
  5. மனோன்மணி தாயார் சாக்த்த வழிபாட்டின் உயர்ந்த வடிவம்

    ReplyDelete
  6. மனோன்மணி - அருமையான விளக்கம் - மனங்களை தட்டி எழுப்புபவள், நஞ்சை (கொண்ட மனத்தை) அமிர்தமாய் மாற்றுபவள் அன்னை பார்வதி தேவி!

    ReplyDelete